வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:11 IST)

ஜோடி நல்ல ஜோடியின்னு மாப்பிள்ளை, பொண்ண பாரு... இனிய திருமண வாழ்த்துக்கள் ரஜினி சார்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவை 1981ம் ஆண்டு இதே நாளில் தான் கரம் பிடித்தார். இந்த ஜோடிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.


 
1981ம் ஆண்டு தில்லுமுல்லுத்தின் ஷூட்டிங்  நடந்து கொண்டிருந்தது. அப்போது ரஜினியை , எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா ஒரு பத்திரிகைக்கா பேட்டி எடுக்க சென்றார்.
 
அப்போது முதல் சந்திப்பிலேயே லதாவிடம் தன்னை மணக்க விருப்பமா என ரஜினி கேட்டார். 
அதற்கு லதா வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்ததுள்ளது.
 
இது தொடர்பாக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ஒரு பேட்டியில், லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை ஈசியாகிவிட்டது. மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்று கூறியதாக தெரிவித்தார் 

 
இதையடுத்து ரஜினி, லதா இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். மனம் ஒத்த தம்பதியாக வாழும் ரஜினி, லதா ஜோடிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்போது லதா, ரஜினி தம்பதிகள் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.