வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (09:36 IST)

குட்டி தல ஆத்விக்கு இன்று பிறந்த நாள்! செம்ம வாழ்த்து சொன்ன மதுரை ரசிகர்கள்

'தல அஜித்'  தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயர்.  தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அஜித்தின் படம் எது வந்தாலும்  திருவிழா போல கொண்டாடி மகிழ்வார்கள். அஜித்தின் ஒற்றை புகைப்படம் வெளியே வந்தாலை அதை வைரல் செய்து மகிழ்வார்கள். நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி வருகிறது. அன்று தொழிலாளர் தினமும்கூட. அன்றைய தினத்தில் அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக அவர்கள் வருடா வருடம் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தல அஜித் ஷாலினி தம்பதி மகன் ஆத்விக் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 
 
மதுரையில் உள்ள ரசிகர்கள் அஜித்தின் மகன் ஆத்விக்கின் முகத்தை சுவரில் பிரமாண்டமாக வரைந்துள்ளனர். அந்த சுவர் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.