செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (20:54 IST)

'நேர் கொண்ட பார்வை' படத்தின் சென்சார் தகவல்

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த  படம் வெளியாகும் தேதியை நேற்று தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர். 
 
இந்த நிலையில் இன்று சென்சார் அதிகாரிகள் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்து, படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்தனர். இதனை அடுத்து இந்தப் படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'யூஏ' சான்றிதழ் என்றால் 18 வயதுக்குக் குறைவானவர்கள் தனியாக சென்று இந்த படத்தை பார்க்க முடியாது என்பதும் பெற்றோர் அல்லது பெரியவர்களுடன் சென்றே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் பக்ரீத் மற்றும் சுதந்திர தின விடுமுறையில் வெளியாகவிருப்பதால் அபாரமான ஓப்பனிங் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது