செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:19 IST)

நடிகர் விக்ரம் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு: ஏன் தெரியுமா?

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை 9 மணிக்கு 13.58 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருப்பதாகவும் ஒரு சில தொகுதிகளில் 20 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் சென்னையில் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா உள்பட பல திரையுலக பிரபலங்கள் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து விட்டனர் என்பது குறிப்பிடதக்கது 
 
இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் தனது பெசன்ட் நகர் வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே சென்று வாக்களிக்க வந்தார். அப்போது நடிகர் விக்ரம் வாக்குப் பதிவு செய்யும் வாக்குப்பதிவு மையத்தில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தற்போது விக்ரம் வாக்குச்சாவடியில் காத்திருப்பதாகவும் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டவுடன் அவர் வாக்களிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன