1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:58 IST)

2 மணி நேரத்தில் 13.80% வாக்குப்பதிவு! – பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்!

2 மணி நேரத்தில் 13.80% வாக்குப்பதிவு! – பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்!
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வாக்குப்பதிவு மிக வேகமாக நடந்து வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 2 மணி நேரத்திற்குள்ளாக தமிழகம் முழுவதும் 13.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கலில் 20.28% வாக்குகளும், சென்னையில் 10.98% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய ப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.