திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 11 மே 2022 (20:41 IST)

விக்ரம் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்

vikram
கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம் முதல் சிங்கில் தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கு முன்னமே, மே 11 ஆம் தேதி இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, அனிருத் இசையில்,  கமலே எழுதி பாடியுள்ள பத்தல பத்தல என்ற பாடல் சோனி மியூசில் சவுத் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

இது வெறும் 20 நிமிடத்தில் 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.