1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 மே 2022 (15:54 IST)

விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் ‘பத்தல பத்தல’…வெளியான மாஸான கிளிம்ப்ஸ்!

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக மே 11 ஆம் தேதி இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை கமலே எழுதி பாடியுள்ளார். இந்நிலையில் தற்போது பாடலின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னோட்டத்தைப் பார்க்கும் போது சரியான குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.