வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:06 IST)

விக்ரம் நடிக்கும் புதியப் படம் – ஜூனில் படப்பிடிப்பு !

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது.

விக்ரம், கமல் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்புப் பணிகளை முடித்துவிட்டு இப்போது ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்  மூலம் கவனம் பெற்றவர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் விக்ரம் நடித்துள்ள கடாரம்கொண்டான் படம் வரும் எப்ரல் மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.