புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (07:46 IST)

'வர்மா' படத்தில் இருந்து நான் தான் விலகினேன்: ஆதாரத்துடன் விளக்கிய பாலா

விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான 'வர்மா' படம் கைவிடப்பட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவித்து, மீண்டும் இந்த படத்தை முதலில் இருந்து படமாக்கப்படவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின் விக்ரம் இருந்ததாகவும், முழுப்படத்தை பார்த்த விக்ரம், தனது மகனுக்கு முதல் படமே மோசமான படமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஈ4 எண்டர்டெயின்மெண்ட் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னரே பாலா இந்த படத்தில் இருந்து கடந்தத ஜனவரி மாதமே விலகிவிட்டதாகவும், விலகுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டு விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் விக்ரம் மகன் துருவ் எதிர்கால நலன் கருதி இந்த விஷயம் குறித்து மேலும் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலா தனது விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றேன். படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு.. துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.