செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (07:12 IST)

என்னுடைய பெஸ்ட்டை தங்கலானுக்குக் கொடுத்திருக்கிறேன்… ஜி வி பிரகாஷ் நெகிழ்ச்சி!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்துக்கு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இப்போது இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் இருந்த நிலையில், தற்போது படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் படம் கண்டிப்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் சமூகவலைதளப் பக்கத்த்ல் “தங்கலான் பட பின்னணி இசை வேலைகள் முடிந்துவிட்டன. என்னுடைய பெஸ்ட்டை இந்த படத்துக்காகக் கொடுத்திருக்கிறேன். ரிலீஸை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வெறித்தனமான டிரைலர் விரைவில்” என எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக அப்டேட் கொடுத்துள்ளார்.