தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான் என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த படத்துக்கு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இப்போது இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் இருந்த நிலையில், தற்போது படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் படம் கண்டிப்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.
விரைவில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரைலர் 2 மணிநேரம் 12 வினாடிகள் ஓடும் அளவுக்கு கட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.