வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified சனி, 1 அக்டோபர் 2022 (19:00 IST)

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த விக்ரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சீயான் விக்ரம், பிரபல ஊடகத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாக்கள் பற்றிய விமர்சனம், நடிகர், நடிகர்கள் பற்றிய தகவல்கள், சினிமா விமர்சனம், ஷூட்டிங் உள்ளிட்ட தகவல்களை ரசிகர்களுக்கு சுடச் ச்உட வழங்குவதிலும் புதியவற்றை கூறுவதிலும் வலைப்பேச்சு என்ற யூடியூப் ஊடகம முன்னணியில் உள்ளது.
இந்த வலைப்பேச்சு ஊடகத்தில் சினிமா விமர்சகர் பிஸ்மி, வலைப்பேச்சு அந்தனன் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த   யூடியூப் சேனல் தொடங்கி ஐந்து ஆண்டுகள்  நிறைவடைந்து, 6 ம் ஆண்டில் கால்பதிக்கும் நிலையில், இந்த யூடியூப் சேனலுக்கு நடிகர் விக்ரம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் கைப்பட எழுதியுள்ளதாவது: ஆறாம் ஆண்டில் வெற்றியோடு கால்பதிக்கும் ‘’வலைப்பேச்சு ‘’எங்கள் வாழ்த்துகள்…தங்கள் வெற்றிப் பயணம் தொடர எங்கள் வாழ்த்துகள் அன்புடன் சீயான் விக்ரம்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Sinoj