1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:09 IST)

குமரி அனந்தனுக்கு அரசு வீடு: அரசாணையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

kumari anandhan
குமரி அனந்தனுக்கு அரசு வீடு: அரசாணையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கிய அரசாணையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரிடம் அளித்து உள்ளார். 
 
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரிஅனந்தன் காங்கிரஸ் பிரமுகர் என்பதும், சுதந்திர போராட்ட தியாகி என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழுக்கும் தமிழகத்திற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்த குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது 
 
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழக வீட்டு வசதி  வாரியத்தின் குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார்
 
இது குறித்த அரசாணையை இன்று குமரி அனந்தனிடம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் கொடுத்தார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.