வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2022 (18:57 IST)

வலைப்பேச்சு அந்தணனன் பெயரில் பண மோசடி?

valaipeachu anadhanan
பிரபல தமிழ் சினிமா விமர்சகரும், பிஸ்மியில் வலைபேச்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருபவருமான வலைப்பேச்சு அந்தணன், பல்வேறு சினிமா விஷங்களில் ஆழமாகப் பேசுபவர்.

சினிமா பட்ஜெட், நடிகர்கள், சினிமா கலைஞர்கள், சினிமா வெற்றி தோல்வி, ஷுட்டிங் உள்ளிட்ட பல தகவல்களை மக்களுக்கு சுவாரஸ்யமாகத் தருபவர் வலைபேச்சு அந்தணன். இவருக்கு என தனிப்பட்டை ரசிகர்கள் உள்ளனர். அத்துடன், இவருக்கு யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாவிலும் அக்கவுண்ட் உண்டு.

இந்த நிலையில், இவரது இன்ஸ்டா அக்கவுண்டை ஓபன் செய்ய முடியாத  நிலையில், இவரது பெயரில்  ஒரு மர்ம  நபர் போலி அக்கவுண்ட் தயார் செய்து, அவர் பெயரில் பணம் கேட்டு மோசடி செய்து வருவதாகவும் ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலைபேச்சு அந்தணன் எச்சரித்துள்ளார்..