விக்ரம் vs துருவ் விக்ரம் மோதல்… கார்த்திக் சுப்பராஜ் பரபர!
சியான் 60 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விக்ரம்முக்கு ஜோடியாக சிம்ரன்னும் துருவ் விக்ரம்முக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிப்பார்கள் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் இரண்டு கதாநாயகிகளுமே விக்ரம்முக்குதான் ஜோடியாக நடிக்கிறார்களாம். இந்நிலையில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்து விட்டு வந்துள்ள விக்ரம் நேராக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளாராம்.
படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே விகர்மும் துருவ்வும் மோதும் சண்டைக்காட்சிகளை எடுத்து வருகிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.