மீண்டும் இணைகிறார்களா விக்ரம்-ஹரி?
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாமி ஸ்கொயர் என்ற திரைப்படம் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்திற்கு பின்னர் ஹரி இன்னும் வேற ஒரு படத்தை இயக்கவில்லை என்பது தெரிந்ததே. சூர்யா நடிப்பில் அருவா என்ற திரைப்படத்தை இயக்க ஹரி திட்டமிட்டு இருந்தார் என்பதும் ஆனால் அந்த படம் எதிர்பாராத விதமாக ட்ராப் ஆகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
அதன்பின்னர் அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை ஹரி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கும் ஒரு படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
விக்ரம் தற்போது ஏற்கனவே கோப்ரா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் மீண்டும் விக்ரம் இணைவாரா என்பதையும் இந்த ஒருவேளை இணைந்தால் இந்த படம் சாமி படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்