புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:43 IST)

தேசிய கீதத்தில் சில வரிகளை நீக்க வேண்டும் – சுப்பிரமணிய சாமி கோரிக்கை

பாஜக கட்சியின் மூத்தத் தலைவரும் பிரபல  வழக்கறிஞருமான சுப்பிரமணிய சாமி அவ்வப்போது தனது கட்சிக்கு எதிராகவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அமைச்சர் என்று கூடப் பார்க்காமலும் எதிர்க்காட்சி தலைவர்கள் மீதும் அதிரடி கருத்துகளை தெரிவிப்பார்.

இந்நிலையில், சுப்பிரமணிய சாமி தற்போது, தேசிய கீதத்தில் உள்ள சில வரிகளை நீக்க வேண்டுமெனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், தேசியக் கவி ரவீந்தரநாத் தாகூர் இயற்றி அறுபதாண்டுகளுக்கு மேலான மக்கள் பாடிவரும் ’’ஜன கண மன’’ என்ற தேசியக் கீதத்தில் உள்ள சிலவரிகளை மாற்றிவிட்டு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் கடந்த 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி சுதந்திரப் பிரகடனம் செய்த பின் பாடிய பாடலின் வரிகளைச் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.