வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (21:36 IST)

''பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு'' வழங்க தனுஷ் ரசிகர்கள் ஏற்பாடு

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர்  தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, 'தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி  நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார்.  இவர்களுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஜூலை 1 -ல் இப்பட ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக  கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  நடிகர் தனுஷின் பிறந்த நாள் வரும் ஜுலை 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி வரை  பொதுமக்களுக்கு இலவச மதிய உணவு வழங்க தனுஷ் ரசிகர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.