திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (23:23 IST)

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்!

விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளை நாளை விஜய் சந்திக்கவுள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் முடிந்து முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீசானது.

இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளை நாளை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் பனையூரில் உள்ள விஜய்யின் தலைமை அலுவலகத்தில் நாளை பிற்பகலில் இக்கூட்டம் நடைபெறஉள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.