1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (23:24 IST)

தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில். தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் டி43 என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக  மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இதன் படப்பிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
=

அதேபோல்,இப்படங்களை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படமும் தனுஷ் நடிக்கவுள்ளார்.

மேலும், தனுஷ் நடிப்பில் தெலுங்கு சினிமா இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில், விஜய்யின் பீஸ்ட் பட நாயகி பூஜா கெஹ்டே நடிக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இப்படத்தை பிரபல தயாரிப்பாளர்,
சித்தாரா எண்டெர்டெட்யின்மெண்ட் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.