பிரபல நிறுவனத்தின் 100 ஆவது படத்தில் விஜய்! அறிவித்த தயாரிப்பாளர்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எல்லாம் சூப்பர்ஸ்டார் தயாரிப்பாளராக விளங்கியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பதை விடுத்து சினிமாக்களுக்கு பைனான்ஸ் மட்டுமே செய்துவந்தார்.
இந்நிலையில் இப்போது அவரது மகன் ஜீவா நடிப்பில் களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் அந்த நிறுவனத்தின் 90 ஆவது படமாகும். இதையடுத்து வரிசையாக படங்களை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனம் தயாரிக்கும் 100 ஆவது படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பார் என ஆர் பி சௌத்ரி தெரிவித்துள்ளார்.