1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:25 IST)

மாஸ்டர் அளவுக்கு வெற்றி பெறும் – சிபிராஜ் படத்தை வாழ்த்திய விஜய் ஆண்டனி!

சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி திரைப்படம் மாஸ்டர் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என விஜய் ஆண்டனி வாழ்த்தியுள்ளார்.

நடிகர் சிபிராஜ் நடித்து வந்த ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் தயாரித்துள்ளார். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த படம் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அப்போது கலந்து கொண்ட பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ‘கபடதாரி திரைப்படம் மாஸ்டர் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெறும்’ எனக் கூறியுள்ளார்.