1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (09:10 IST)

கங்குலி பயோபிக்கில் நடிக்கப் போவது இவர்தான்… வெளியான தகவல்!

இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.

சமீபகாலமாக இந்திய சினிமாவில் விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் சச்சின் மற்றும் தோனி ஆகியோரை அடுத்து கங்குலி பயோபிக் படமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது அந்த பயோபிக் படத்தில் சவுரவ் கங்குலியாக பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.