செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:20 IST)

கடைசி நேரத்தில் மாஸ்டர் பர ப்ரோமோஷன்களில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சேதுபதி – இதுதான் காரணமா?

மாஸ்டர் படத்தின் ப்ரமோஷன்களின் போது விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் போஸ்டர்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் விஜய்யை மட்டுமே முன்னிறுத்தி ப்ரமோஷன் பணிகள் நடைபெற்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் ப்ரமோஷன் பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டுமே செய்து வந்தார். விஜய் இது மாதிரி பட ரிலிஸ் நேரங்களில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வருகிறார். விஜய் வராததால் விஜய் சேதுபதியும் வரவில்லை என சொல்லிவிட்டாராம்.  மாஸ்டர் படத்தில் நடித்த மற்றவர்களுக்கு அந்தளவுக்கு பிரபலம் இல்லை என்பதால் விஜய் சேதுபதியை பெரிதும் நம்பியிருந்த படக்குழு அவர் வராததால் அதிருப்தியில் அவர் புகைப்படங்களை நீக்கிவிட்டதாக தெரிகிறது.