1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (17:29 IST)

விஜய், அஜித் பட இசையமைப்பாளரின் புதிய ஆல்பம் பாடல்... இணையதளத்தில் வைரல்

''மக்கா மக்கா'' என்ற ஆல்பம் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் இப்பாடல் வைரலாகி வருகிறது.

தமிழ்சினிமாவில் மின்னலே என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை அடுத்து, மஜ்னு, அந்நியன், தாம்தூம், உன்னாலே உன்னாலே,பீமா விஜய்யின் நண்பன், அஜித்தின் என்னை அறிந்தால்  உள்ளிட்ட பல படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.

சமீபத்தில், தொழிலதிபர் சரவணன் நடிப்பில் வெளியான லெஜண்ட் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில்,  மக்கா மக்கா என்ற ஆல்பம் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் இப்பாடல் வைரலாகி வருகிறது.

நட்பை பெருமைப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலில், நடிகர் அஷ்வின்குமார், முகேன் ராவ் ஆகியோர் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்., இப்பாடலை பா. விஜய் எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ் பாடியுள்ளார்.