வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:41 IST)

அரசியலா? தொழிலா? விஜய்வசந்த் எடுத்த அதிரடி முடிவு

அரசியலா? தொழிலா? விஜய்வசந்த் எடுத்த அதிரடி முடிவு
பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அதில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வசந்த் நேற்று அளித்த பேட்டியில் ’காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று கூறி இருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’அப்பாவின் நண்பர்கள் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என கூறுகின்றனர். எனக்கும் அரசியலில் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போது அப்பா விட்டு சென்ற தொழில் மற்றும் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலை உள்ளதால் நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அப்பாவின் இழப்பு பேரிழப்பு. அதனை முதலில் ஈடுகட்ட வேண்டும் என்று கூறினார் 
 
ஆனால் அதே நேரத்தில் தான் தற்போதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது