வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:34 IST)

கன்னியாகுமரியில் போட்டியிட ரெடி; கட்சிக்கே அப்ஷன் கொடுத்த நயினார்!!

கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தான் தயார் என்று  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மகன் விஜய் வசந்த், அரசியலில் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. ஆனால், காங்கிரஸ் உறுப்பினராக நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன் என தெரிவித்தார். 
 
இதனிடையே பாஜக மீது வருத்தம் இருப்பதாக கூறி சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்தான் தாமரை சின்னத்தில் உறுதியாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். அதோடு கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தான் தயார் என்றும் தெரிவித்தார்.
 
இதனோடு ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் சந்திப்பதாக இருந்தால் அவர் விருப்பப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 
 
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.