திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (15:07 IST)

வாரிசு ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்… ஆனா இத்தனை வருஷத்த்துக்கானாம்!

வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் பிஸ்னஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளதாகவும், ஆனால் இந்த உரிமை 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லும் என்றும் அதன் பின்னர் வேறு ஓடிடி தளங்களுக்கு விற்க தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளதாகவும், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.