புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified சனி, 3 டிசம்பர் 2022 (18:33 IST)

சிம்புவுக்கு நன்றி கூறிய விஜய் பட தயாரிப்பாளர்

varisu
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் 2 வது சிங்கில்   நாளை ரிலீஸாகவுள்ள நிலையில்,  நடிகர் சிம்புக்கு படத் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில்,   நடிகர் விஜய்- ராஷ்மிகா மந்தனா  நடிப்பில் உருவாகியுள்ள படம்  வாரிசு.

இப்படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின்  துணிவுடன் மோதவுள்ளது.  இந்த  நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் ரஞ்சிதமே பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இப்பாடலை பாடிய சிம்புவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் நன்றி கூறியதுடன், நாளை மாலை  4 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இப்பாடலும் நிச்சயம் சாதனை படைக்கும் என சிம்பு மற்றும் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.