1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (23:22 IST)

'' வாரிசு'' படத் தயாரிப்பாளருக்கு ரீ டுவிட் செய்த சிம்பு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் 2 வது சிங்கில்   நாளை ரிலீஸாகவுள்ள  நிலையில், விஜய் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு சிம்பு ரீ டுவீட் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வம்சி இயக்கத்தில்,   நடிகர் விஜய்- ராஷ்மிகா மந்தனா  நடிப்பில் உருவாகியுள்ள படம்  வாரிசு.

இப்படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின்  துணிவுடன் மோதவுள்ளது.  இந்த  நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் ரஞ்சிதமே பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இப்பாடலை பாடிய சிம்புவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் நன்றி கூறியதுடன், நாளை மாலை  4 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இதற்கு  நடிகர் சிலம்பரசன் தன் டிவிட்டர் பக்கத்தில்  ஹார்ட் எமோஜி பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே சிம்பு பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிய நிலையில், இப்பாடலும் புதிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடம் காத்திருக்கின்றனர்.