வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (12:11 IST)

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. அவர் நடித்த ‘துணிவு’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை கொண்டாடித் தணித்தனர். வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா அஜித்தை விட்டு வேறொருவருடன் காதலில் இருப்பதாக கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரசிகர்கள் மங்காத்தா படத்தில் அஜித் த்ரிஷாவை ஏமாற்றிவிடுவதாக இருக்கும். அதற்கு 13 ஆண்டுகள் கழித்து இப்போது த்ரிஷா விடாமுயற்சி படத்தில் பழிவாங்கிவிட்டதாக மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.