1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (08:46 IST)

பா ரஞ்சித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இன்று அறிவிப்பு!

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் பொம்மைநாயகி என்ற படமும் உள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷான் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.