வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (18:07 IST)

''வாரிசு'' பட ஆடியோ ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

varisu 3rd single
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கையொட்டி துணிவு படத்திற்குப் போ ட்டியாக உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரமாண்டமான  நடக்கும் என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. பாஸின் வருகைக்காக மேடை தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

எங்கு எப்போது நடக்கும் என்ற தகவலை விரைவில் படக்குழு வெளியிடும் என தெரிகிறது.