திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:45 IST)

இன்று முதல் என்னுடைய ஆபீஸில் மதிய உணவு போட போகிறேன்: விஜய் டிவி புகழ் பேட்டி..!

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய் டிவி புகழ் இன்று முதல் என்னுடைய அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு போட போவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான் ஐயா விஜயகாந்த் அவர்கள் இறந்த தினத்தில் அஞ்சலி செலுத்தினேன். இன்று நான் மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. விஜயகாந்த் பசி என்று வருபவர்களுக்கு சோறு போட்டு வழியனுப்பி வைப்பார். நான் அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நானே சென்னைக்கு வந்த புதிதில் பக்கோடா, வாட்டர் பாக்கெட் மட்டும் தான் என்னுடைய உணவாக இருந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஆசியோடு இன்று முதல் நான் என்னுடைய கேகே நகர் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு போட போகிறேன்.

50 பேர்களில் இருந்து இதை ஆரம்பிக்க போகிறேன். பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு அளிக்க முடிவு செய்துள்ளேன். இது குறித்து என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வீடியோ போடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Edited by Siva