திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (10:24 IST)

விஜயகாந்த் பத்தி கேக்காதீங்க.. வேற எதாவது கேளுங்க! – ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களுடன் வாக்குவாதம்!

விஜயகாந்த் பற்றிய கேள்வியை கேட்காமல் கடை திறப்பு விழாவை பற்றி கேள்வி கேளுங்கள் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.


 
தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் செல்லாணி குடும்பத்தின் FEDHA BY CHALLANI என்ற புதிய கடை திறப்பு விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வருகை தந்து கடையை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

வேளச்சேரி தாம்பரம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற புதிய கடை திறப்பு விழாவிற்காக சாலைகளை ஆக்கிரமித்து  போடப்பட்ட பந்தலில் ஐஸ்வர்யா ராஜேஷின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் மறைந்த நடிகர் சங்க தலைவரும் தேமுதிக நிறுவனமான விஜயகாந்த் பற்றிய கேள்விகள் கேட்டபோது அவரைப் பற்றி கேள்வி கேட்காமல் கடை திறப்பு விழாவை பற்றி கேள்வி கேளுங்கள் என காட்டத்துடன் செய்தியாளர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் அளித்தார்.

கடை திறப்பு விழாவிற்காக சாலையில்  இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலைகளை ஆக்கிரமித்து நடைபெற்ற இந்த கடை திறப்பு விழாவால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.