புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (10:25 IST)

ரிலீசுக்கு முன்பே கார்த்தி படத்தை கைப்பற்றிய விஜய் டிவி

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது. அதன்படி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி மிகப்பெரிய தொகை ஒன்றை கொடுத்து பெற்றுள்ளது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் விநியோக உரிமை குறித்த வியாபார பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.