செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (16:25 IST)

கொரோனாவால் மீண்டும் ஒன்றிணைந்த சரவணன் மீனாட்சி ஜோடி!

கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதில் நடிப்பவர்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு விரைவில் ஒளிபரப்ப்பப் பட இருக்கிறது. இந்நிலையில் லாக்டவுனால் வெளி மாநிலங்களில் சிக்கிக்கொண்ட சில நடிகர்களால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நடிக நடிகைகளை மாற்ற வேண்டிய இக்கட்டுக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் ஏற்கனவே நடித்திருந்த மிர்ச்சி செந்தில் ரக்சா ஜோடியில் ரக்சாவுக்குக்கு பதிலாக சரவணன் மீனாட்சி புகழ் ரக்சிதா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.