செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (08:30 IST)

ஜீடிவி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் தீவிபத்து: அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்

ஜீடிவி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் தீவிபத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் சமீபத்தில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றான ஜீடிவியில் ஒளிபரப்பாகும் இந்தி தொடரான ’கும்கும் பாக்யா’ என்ற தொடரின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. இந்த தொடரின் படப்பிடிப்புக்காக முக்கிய நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது திடீரென இந்த படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள செட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த தொடரில் நடித்த நடித்து வந்த நடிகர் நடிகைகள் அவசர அவசரமாக ஸ்டூடியோவை விட்டு வெளியேறினார்கள்.
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னணி சின்ன தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது