1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (22:31 IST)

அஜித் பட இயக்குநருடன் இணையும் விஜய் ??

தீரன் அதிகாரம் 1, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியுள்ளவர் இயக்குநர் ஹெச்.வினோத். இவர் தற்போது வலிமை படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ஹெச், வினோத் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து ஹிட் படம் கொடுத்த பேரரசுவின் இயக்கத்தில் நடிகர் அனித் நடித்தார்.

அதேபோல் அஜித்தின் ஹிட் பட இயக்குநருடன் விஜய் பணிபுரியவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகிறது.

மேலும் மாஸ்டர் படப் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் தந்து நண்பர் அஜித் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.