வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (17:49 IST)

தளபதி 65 படப்பிடிப்பு எப்போது? நெல்சனுக்காக காத்திருக்கும் படக்குழு!

நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன்  நடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் முடிந்தது இதனை அடுத்து படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார். டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் டாக்டர் படத்தின் பின் தயாரிப்புப் பணிகளை இப்போது நெல்சன் பரபரப்பாக செய்து வருகிறாராம். பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு விஜய் படத்தின் பணிகளில் கவனம் செலுத்த உள்ளாராம்.