1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (10:51 IST)

’தளபதி 65’ படத்திலும் சூப்பர் சிங்கர் சிறுவன்: 3ஆம் முறையாக இணைகிறார்!

’தளபதி 65’ படத்திலும் சூப்பர் சிங்கர் சிறுவன்: 3ஆம் முறையாக இணைகிறார்!
தளபதி விஜய் நடித்த பிகில், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவன் பூவையார் தற்போது விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் சிறுவர் பூவையார். கானா பாடல்களை தனக்கே உரிய பாணியில் பாடி அசத்தும் இவர் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலை பாடியது மட்டுமன்றி அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார் 
 
அதன் பிறகு சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்த பூவையார் தற்போது விஜய்யின் அடுத்த திரைப்படமான தளபதி 65 படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து விஜய்யுடன் அடுத்தடுத்த மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது