1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:09 IST)

நண்பர்கள் தினத்தில் நண்பர்களுடன் பேசிய விஜய்: சின்னத்திரை நடிகர் தகவல்!

நண்பர்கள் தினத்தில் நண்பர்களுடன் பேசிய விஜய்
உலக நண்பர்கள் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று தங்களது நண்பர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் உலக நண்பர்கள் தினம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நண்பர்களுக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் கொடுக்கும் தளபதி விஜய் நேற்று உலக நண்பர்கள் தினத்தை அனைத்து தனது நீண்டகால நண்பர்களிடம் வீடியோகாலில் பேசியுள்ளார். குறிப்பாக விஜய்யின் நெருங்கிய நண்பரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் இடம் அவர் வீடியோ காலில் பேசியுள்ளதை, சஞ்சீவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சஞ்சீவி மட்டுமின்றி பல நெருக்கமான நண்பர்கள் உடன் விஜய் வீடியோகாலில் பேசி சிரித்து மகிழ்ந்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. விஜய் தன்னுடன் வீடியோ காலில் பேசியதை குறிப்பிட்டுள்ள சஞ்சீவி, அவர் என்ன பேசினார் என்பதை குறிப்பிடவில்லை. இருப்பினும் ரசிகர்கள் விஜய் என்ன சொன்னார் என்பதை கேட்டு வருகின்றனர் விரைவில் அவர் இது குறித்த முழு தகவல்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது