லூசிஃபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் சிரஞ்சீவி – இயக்குனர் அதிரடி மாற்றம்!

Last Modified சனி, 1 ஆகஸ்ட் 2020 (10:42 IST)

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருந்து சாஹோ படத்தின் இயக்குனர் சுஜித் விலகியுள்ளார்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

முதலில் பிரபாஸை வைத்து சாஹோ என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகளை மாற்றும் பணிகளில் சுஜித் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரின் திரைக்கதையில் சிரஞ்சீவிக்கு திருப்தி இல்லை என்பதால் அவரை தூக்கிவிட்டு விவி விநாயக் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவியை வைத்து கைதி நம்பர் 150 என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :