செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:52 IST)

சாதனை படைத்த விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா பாடல்!

நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்தில் இடம்பெற்ற நீயும் நானும் அன்பே எனும் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கபட்டுள்ளது.

கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் இமைக்கா நொடிகள் படம் ரிலிஸானது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, சிறப்பு தோற்றத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. அவரும் நயன்தாராவும் இடம்பெறும் நீயும் நானும் அன்பே பாடல் இப்போது யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இது சம்மந்தமாக படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த பாடலுக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, கபிலன் வரிகளை எழுதியிருந்தார்.