வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (10:15 IST)

காருக்குள் பெண் தோழிகளுடன் குத்தாட்டம் போட்ட விஜய் மகன் - வீடியோ!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
அண்மையில் கூட சஞ்சய் கனடாவில் “புல் தி டிரிகர்” என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார்.  இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்க, இயக்குனர்கள் அல்போன்ஸ் புத்ரன், சுதா கொங்கரா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியவர்கள் முயற்சி செய்ததாகவும், ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் இயக்கத்தில்தான் தனக்கு முழு ஈடுபாடு என சஞ்சய் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
தொடர்ந்து அவ்வப்போது சஞ்சய் குறித்து ஏதேனும் செய்தி வெளியானால் அது அவரது அப்பாவுக்கு ஈடாக சமூகவலைத்தளங்களில் வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது காருக்குள் தனது பெண் தோழிகளுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனந்தையும் ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்: 
https://www.youtube.com/shorts/4JamRkVaEPs