90 நிமிடப்படத்தை எப்படி தியேட்டரில் ரிலீஸ் பண்ணுவது… விஜய் சேதுபதியால் வந்த குழப்பம்!
நடிகர் விஜய் சேதுபதியின் மகள் நடிக்கும் முகிழ் படத்தை திரையரங்கில் ரிலிஸ் செய்ய விஜய் சேதுபதி முயற்சி செய்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமில்லாமல் படங்களைத் தயாரிப்பது, கதை வசனம் எழுதுவது என பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் மகன் சூர்யாவை ஏற்கனவே சிந்துபாத் திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். அதையடுத்து இப்போது அவர் மகள் ஸ்ரீஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முகிழ் என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். அந்த திரைப்படம் விஜய் சேதுபதியும், ரெஜினா கசாண்ட்ராவும் முகில் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியது. முதலில் ஓடிடியில் ரிலீஸ் செய்வது என்ற முடிவோடுதான் இதை உருவாக்கினார்கள். ஆனால் இப்போது திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய விஜய் சேதுபதி முயன்று வருகிறாராம். ஆனால் குறைந்த நீளமுடைய இந்த படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்ற யோசனையில் உள்ளார்களாம் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும்.