வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (09:30 IST)

முன்னணி நடிகர்கள் பெப்சிக்காக படம் நடிக்கவேண்டும்… ஆர் கே செல்வமணி கோரிக்கை!

நடிகர் விஜய் சேதுபதி பெப்சி அமைப்புக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

திரைத்துறையில் தினக்கூலி பெறும் 24 வகையான ஊழியர் சங்கங்களின் தொகுப்பாக பெப்சி செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக ஆர் கே செல்வமணி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்களின் நலன்களுக்காக முன்னணி நடிகர்கள் வருடத்தில் 4 முதல் 5 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அப்படி ஒதுக்கினால் அவர்களை வைத்து படம் எடுத்து தொழிலாளர்களுக்கு உதவ முடியும் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக விஜய் சேதுபதியிடம் 7 நாட்கள் கால்ஷீட் கேட்டதாகவும், அதில் சிக்கல் இருப்பதால் அவர் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.