திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (20:37 IST)

எனது வாயில் சிறுநீர் அடித்தான்: கூச்சம் இல்லாமல் வெளியே சொன்ன விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி இப்போதுதான் பீட்சா படத்துல ஹிரோவா நடிக்க துவங்கிய மாதிரி இருக்கு அதுக்குள்ள 25 வது படம் ரிலீஸுக்கு காத்திருக்கு என கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. 
 
ஆம், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதக்காதி. இது விஜய் சேதுபதியின் 25 வது படம். இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படம், வருகிற 20 ஆம் தேதி வெளியாக்வுள்ளது. 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் சினிமாவில் நுழையக் காரணம், ரசிகர்களின் கைதட்டல் மட்டும்தானா? என கேட்கப்பட்டது. அதர்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார். 
 
முதல் முறையாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் அடிப்பது போன்றது. அதில் நான் நடித்து முடித்ததும் படக்குழுவே கை தட்டியது. அந்த கை தட்டல் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது என பதில் அளித்தார்.