திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (23:11 IST)

விஜய் சேதுபதியின் லாபம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி லாபம் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தை எச்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், கலையரசன், ஜகபதிபாபு, ஹரீஸ் உத்தமன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 7 சிஎச் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்படத்தின் டிரைலர் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது