திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:15 IST)

கோபிநாத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4ஆம் சீசன் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே 
 
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், சூர்யா தேவி, ஜோ மைக்கேல், உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான நீயா நானா என்ற நிகழ்ச்சியை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருபவர் கோபிநாத். இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என்று கூறப்பட்டது
 
ஆனால் கோபிநாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் இதுகுறித்து கூறிய போது ’கோபிநாத் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் அவர் மிகுந்த குடும்ப சென்டிமென்ட் உள்ளவர் என்றும் அவரால் குடும்பத்தை விட்டு ஒருநாள் கூட பிரிந்திருக்க முடியாது என்றும் கூறி உள்ளனர்
 
எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோபிநாத் கலந்துகொள்வதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்றும் இது நடக்க வாய்ப்பே இல்லை என்றும் விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன